மாவட்ட செய்திகள்

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் + "||" + Inderani Mukerji filed a petition seeking bail

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு இந்திராணி முகர்ஜி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை,

பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேரும் ஜெயிலில் தான் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கைதி மஞ்சுளா கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு காரணமாகவும் ஜெயிலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
ஷீனாபோரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. கோர்ட்டில் ஜாமீன் பெற போலி சான்றிதழ் தயாரித்த பெண் கைது
திருப்பூரில் கோர்ட்டில் ஜாமீன் பெற போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
3. நிர்மலாதேவி விவகாரம்: சிலரை தப்பிக்க வைத்து வழக்கை முடிக்க போலீசார் முயற்சி, வக்கீல் பரபரப்பு வாதம்
நிர்மலாதேவி ஜாமீன் மனு விசாரணையின் போது, சிலரை தப்பிக்க வைத்து வழக்க முடிக்க போலீசார் முயற்சிப்பதாக வக்கீல் தெரிவித்தது ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளிலும் ஜாமீன்
கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளில் ஜாமீன் கிடைத்து உள்ளது.
5. சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக புகார்: ஹீலர் பாஸ்கர், சீனிவாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக கூறப்பட்ட புகாரில் கைதான ஹீலர் பாஸ்கர், பயிற்சி மைய மேலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.