நாட்டின் பொருளாதாரம் பலம் பெற உயர்கல்வி முறை மாற வேண்டும் : கஸ்தூரிரங்கன் பேச்சு


நாட்டின் பொருளாதாரம் பலம் பெற உயர்கல்வி முறை மாற வேண்டும் : கஸ்தூரிரங்கன் பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2018 5:11 AM IST (Updated: 11 Aug 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசின் உயர்கல்வி கவுன்சில் சார்பில் இந்தியாவில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் தலைவரும், தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை திருத்த குழுவின் தலைவருமான கஸ்தூரிரங்கன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டின் உயர்கல்வி முறை சரி இல்லை என்று அவ்வப்போது பேச்சு எழுவது உண்டு. சிலர் நமது கல்வி முறை வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான ஒரு கருவியாகவே உள்ளது என்றும், இன்னும் சிலர், இந்த கல்வி முறை வேலை வாய்ப்பு பெறக்கூடியதாக இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் நமது கல்வி முறை எப்படி இருக்க வேண்டும்?. நாட்டின் பொருளாதாரம் இன்னும் பலம்பெற வேண்டுமென்றால் உயர்கல்வி முறை மாற வேண்டும்.

இவ்வாறு கஸ்தூரிரங்கன் பேசினார்.

கருத்தரங்கில் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி. தலைவர் டி.பி.சிங் பேசுகையில், “உயர்கல்வியில் உலகில் இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது. 900-க்கும் அதகமான உயர்கல்வி நிறுவனங்கள், 37 ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரிகள், 3.6 கோடி மாணவ-மாணவிகள், 12.84 லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அனைவரும் உயர்கல்வியை பெறும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்“ என்றார். 

Next Story