நெல்லை மாவட்டத்தில் விஸ்வரூபம்-2 சினிமா திரையிடப்பட்டது ரசிகர்கள் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தில் விஸ்வரூபம்-2 சினிமா திரையிடப்பட்டது ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:07 AM IST (Updated: 11 Aug 2018 10:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 சினிமா நேற்று திரையிடப்பட்டது. இதையொட்டி ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 சினிமா நேற்று திரையிடப்பட்டது. இதையொட்டி ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

விஸ்வரூபம்-2

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளன. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடித்து வெளியாகி இருக்கும் முதல் படம் இதுவாகும். எனவே ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

விஸ்வரூபம்-2 திரைப்படம் நெல்லை மாவட்டத்தில் நெல்லையில் 2 தியேட்டர்களிலும், தென்காசி, ஆலங்குளம், அம்பை, சங்கரன்கோவில், சுரண்டை மற்றும் புளியங்குடி ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டர்களிலும் நேற்று திரையிடப்பட்டது.

இதையொட்டி நெல்லை உடையார்பட்டியில் உள்ள தியேட்டர், சந்திப்பில் உள்ள தியேட்டர்களில் கமல்ஹாசன் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் செண்டை மேளம் முழங்க ஆடிப்பாடி, கொண்டாடினார்கள். மேலும் விஸ்வரூபம்-2 திரைப்படம் பரபரப்பான சண்டை காட்சிகளுடன் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள்.

Next Story