மாவட்ட செய்திகள்

அழகு சிகிச்சையால் ஏற்பட்ட அபாயம்! + "||" + Risk for beauty treatments

அழகு சிகிச்சையால் ஏற்பட்ட அபாயம்!

அழகு சிகிச்சையால் ஏற்பட்ட அபாயம்!
அழகுக்காக பல சிகிச்சைகள் செய்துகொண்ட பெண், இனியும் அது போன்ற முயற்சியில் இறங்கினால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
இங்கிலாந்தில் சசெக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த அந்த 43 வயது பெண்ணின் பெயர், ஐமி வீனஸ்.

இவர் பல ஆண்டுகளாகவே தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ள பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டு வந்திருக்கி றார்.

மூக்கு, கண்கள், உதடுகள், வயிறு என உடம்பின் பல்வேறு பகுதிகளில் தொடர் சிகிச்சைகளை செய்து வந்துள்ளார்.

இதற்காக ஐமி இதுவரை ரூ. 90 லட்சம் செலவு செய்திருக்கிறார். ஆனால் அழகு சிகிச்சைக்காக இன்னும் பணம் செலவிடுவேன் என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதற்கு மேலும் அறுவைசிகிச்சை செய்தால் எனது உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்றாவது ஒருநாள் நான் இறக்கத்தான் போகிறேன், அந்த இறப்பு என் இளமைக்கு உதவும் அறுவைசிகிச்சை மூலமாக வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். என் 25 வயதிலிருந்து இது போன்ற சிகிச்சையை எடுத்து வருகிறேன், இறுதிவரை இப்படித்தான் செய்வேன்’ என சாதாரணமாகக் கூறுகிறார்.

அழகு பித்துப்பிடித்த ஐமியை யார் திருத்துவது?