திருவாரூரில் காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் உறவினர் கைது


திருவாரூரில் காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் உறவினர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 3:45 AM IST (Updated: 12 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கிய அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் எஸ்.ஆர்.ஆர். சந்து பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ். இவருடைய மனைவி துர்க்கா (வயது 24). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மதன்ராஜை காதலித்து, வீட்டை விட்டு ஒடி திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துர்க்காவிற்கு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த துர்க்கா, தனது பெரியம்மா பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பட்டுவின் மகன் மணிகண்டன் (33), எதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தாய் என கேட்டு துர்க்காவை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த துர்க்கா திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து துர்க்கா திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். 

Next Story