மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம், கலெக்டர் லதா தகவல் + "||" + Persons with disabilities; Apply for vocational training

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம், கலெக்டர் லதா தகவல்

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம், கலெக்டர் லதா தகவல்
தையல் பயிற்சி, உதவி செவிலியர் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் பெற மாற்றுத்திறனாளிகள் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் பதிவுபெற்ற நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் பின்வரும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். திருப்பத்தூரில் உள்ள ட்ருபா நிறுவனம் மற்றும் நே‌ஷனல் அகாடமி தொழிற்பயிற்சி பள்ளி மூலம் தலா 60 பேருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர 5–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த மற்றும் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இதேபோன்று திருப்பத்தூர் நே‌ஷனல் அகாடமி தொழிற்பயிற்சி பள்ளி சார்பில் குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதன பொருட்கள் பழுதுநீக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் சேர 8–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 18 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் பூவந்தியில் உள்ள ராஸ் அகாடமி மூலம் உதவி செவிலியர்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கு பெண் மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விரும்பும் பெண்கள் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ‘ஸ்மார்ட் சிவகங்கை‘ என்ற செல்போன் செயலி மூலம் அனைத்து விவரங்களை பதிவு செய்து வருகிற 25–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அணுகி தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.