ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்


ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:00 AM IST (Updated: 12 Aug 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, அர்தோதய புண்ணியகாலம், மகோதய புண்ணியகாலம் ஆகிய நித்திய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வந்து முதலில் ஆதிசேது என்னும் கோடியக்கரையில் சித்தர் கட்ட கடற்கரை பகுதியில் புனித நீராடி பின்பு வேதாரண்யத்தில் உள்ள சன்னதிக்கடல் என்று அழைக்கப்படும் வேதநதியில் புனித நீராடியும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

பின்னர் அவர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தென்புறமுள்ள மணிகர்ணிகை என்னும் தீர்த்த குளத்தில் புனித நீராடியும் திருமணக்கோலத்தில் உள்ள சிவபெருமானையும், தெற்கு முகம் நோக்கி திருபங்கி வடிவில் அமைந்துள்ள துர்க்கையம்மனுக்கும் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி நேற்று ஆயிரக்கணக்கானோர் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்யம் சன்னதிக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகை தீர்த்தல் இருந்து மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தெளிப்பான் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானையும், தெற்கு முகம் பார்த்த திரிபங்கி வடிவில் உள்ள துர்க்கையம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் நீர்மோர், குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது.

படகில் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் சென்று கடற்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் வேதாரண்்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்கரை, கோடியக்காடு, ஊராட்சியினர் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை சிறப்பாக செய்திருந்தனர். 

Next Story