மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை கலெக்டர் பேட்டி + "||" + The collector interviewed to provide water for uninterrupted areas in the Tanjore district

தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை கலெக்டர் பேட்டி

தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை கலெக்டர் பேட்டி
தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.
சேதுபாவாசத்திரம்,

கல்லணை திறக்கப்பட்டு பல நாட்களான பின்னரும் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை உள்ளிட்ட இடங்களில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.


கடைமடை பாசன வாய்க்கால்களில் முழு கொள்ளளவு தண்ணீரை திறந்து விடக்கோரியும், முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதை கைவிடக்கோரியும் குருவிக்கரம்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் புதுப்பட்டினம், சேதுபாவாசத்திரம் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக சென்றடைந்து விட்டதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கடைமடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுப்பட்டினம், கட்டையன்காடு, பூவாணம், புதுக்கரம்பை, பள்ளத்தூர், ஆண்டிக்காடு, சேதுபாவாசத்திரம் கிளை 5-ம் நம்பர் வாய்க்கால், குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் ஆய்வு நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்லணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. ஆனால் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. ஏரி, குளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளன.

நிலத்தடி நீர்மட்டம் 290 அடிக்கு கீழே சென்றுவிட்டது, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே கடைமடைக்கு தண்ணீர் வழங்குவதில் உள்ள இடையூறுகள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இடையூறுகளை நீக்கி கடைமடைக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கோவிந்தராஜ் எம்.எல்.ஏ., பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் துரைமாணிக்கம், சுந்தர்ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரத்தால் சட்டம்– ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: கேரள அரசை கலைக்க வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி
சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் சட்டம்– ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் கேரள அரசை கலைக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
2. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரியம் பாதிக்காது திருமாவளவன் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரியம் பாதிக்காது என திருமாவளவன் கூறினார்.
3. ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது வெளியாகும்? நாமக்கல்லில் சத்தியநாராயணராவ் பேட்டி
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என நாமக்கல்லில் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கூறினார்.
4. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
5. ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி
ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.