மாவட்ட செய்திகள்

நீலகிரியில் 27 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணிக்காக 2 குழுக்கள் அமைப்பு + "||" + Sealing to 27 private hotels in Nilgiris 2 groups system

நீலகிரியில் 27 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணிக்காக 2 குழுக்கள் அமைப்பு

நீலகிரியில் 27 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணிக்காக 2 குழுக்கள் அமைப்பு
நீலகிரியில் 27 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணிக்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

மசினகுடி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள 39 தனியார் விடுதிகளில் 27 விடுதிகளை காலி செய்ய உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நாளை(அதாவது இன்று) அந்த விடுதிகளுக்கு ‘சீல்‘ வைக்கும் பணி நடைபெறும். அதற்காக வருவாய் துறை, உள்ளாட்சி துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டதில், 11 விடுதிகளின் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 1 விடுதியின் உரிமையாளர் மட்டும் சமர்ப்பிக்கவில்லை. ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட விடுதிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்வார்கள். அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.