சேலத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: இணையதளத்தில் அனுமதி படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்


சேலத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: இணையதளத்தில் அனுமதி படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:15 AM IST (Updated: 12 Aug 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் வருகிற 22–ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 2–ந்தேதி வரை நடக்கிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் வருகிற 22–ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 2–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அனுமதி படிவங்களை இந்த முகாமில் பங்கேற்பவர்கள் ராணுவ ஆள்சேர்ப்பிற்கான ஷ்ஷ்ஷ்.ழீஷீவீஸீவீஸீபீவீணீஸீணீக்ஷீனீஹ்.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்த அனுமதி படிவத்தை கருப்பு வெள்ளை நிறத்தில் லேசர் பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும்.

லேசர் பிரிண்டில் உள்ள அனுமதி படிவங்கள் மட்டுமே ஏற்கப்படும். ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இலவச சேவையாகும். எனவே விண்ணப்பதாரர்கள் வேலை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்களையோ, முகவர்களையோ நம்பி ஏமாறக்கூடாது.

பணம் கொடுத்து வேலையை பெற முயற்சிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு தங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் கடின உழைப்பு, தேர்ச்சிக்கான தகுதியை பெறுதல் ஆகியவை மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story