உணவில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், திருக்கோவிலூர் சப்–கலெக்டர் எச்சரிக்கை


உணவில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், திருக்கோவிலூர் சப்–கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2018 11:24 PM GMT (Updated: 11 Aug 2018 11:24 PM GMT)

பொதுமக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருக்கோவிலூர் சப்–கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சப்–கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். தாசில்தார் செல்வராஜ் வரவேற்றார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில், திருக்கோவிலூர் நகர பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் 30 ரூபாய் வரைக்கும் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. மேலும் சிலிண்டர்களில் கியாஸ் குறைந்த அளவே இருக்கிறது.

மேலும், திருக்கோவிலூர் பகுதியில் விற்பனை செய்யப்படும், பெரும்பாலான உணவு பொருட்கள் தரமற்றவையாக இருக்கின்றன. இதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று நுகர்வோம் அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு பதில் அளித்து, சப்–கலெக்டர் சாருஸ்ரீ பேசுகையில், பொதுமக்கள் உண்ணும் உணவில் கலப்படம் இருந்தால், அது அவர்களது உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே உணவு பாதுகாப்பு அதிகரி£கள் மிகவும் கவனமுடன் செய்பட வேண்டும். தவறுகள் நடந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த துறையை சேர்ந்த ஊழியர்களிடம் அவர் தெரிவித்தார்.

சந்தப்பேட்டையில் நு£லகம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பேசினர். மேலும் கோரிக்கை மனுக்களையும் அவர்கள் அளித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த சப்–கலெக்டர் சாருஸ்ரீ நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும், அந்தந்த துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்காமல் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்த சப்–கலெக்டர் சாருஸ்ரீ, அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதில் கண்டாச்சிபுரம் தாசில்தார் புஷ்பா, வட்ட வழங்கல் அலுவலர் சத்தியநாராயணன், உதவி கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன், நல்நு£லகர் எம்.அன்பழகன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மோகன், சுவிதாகணேசன், ராஜேந்திரன், வேலாயுதம், ராம்குமார் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் துறையின் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுந்தர் நன்றி கூறினார்.


Next Story