போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் சரத்பவார் வேண்டுகோள்


போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் சரத்பவார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Aug 2018 12:30 AM GMT (Updated: 12 Aug 2018 12:30 AM GMT)

இடஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பூர்வ பணிகள் முடியும் வரை போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வேண்டுேகாள் விடுத்துள்ளார்.

மும்பை,

மராத்தா சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு சமீபத்தில் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதனால் தற்போது மராட்டியத்தில் அமைதியற்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் கூறியதாவது:-

ஒருமுறை போராட்டம் தொடங்கப்பட்டால் அதை எங்கு நிறுத்தவேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இதற்காக நான் போராட்டக்காரர்களை பாராட்டுகி றேன். இந்த போராட்டம் மராத்திய சமுதாயத்தினரின் பலத்தை வெளிப்படுத்தி யுள்ளது.

கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை களை மேற்கொள்ளவேண் டும். அதற்கான கால அவகாசத்தை அரசுக்கு வழங்குவது அவசியமாகும். அதுவரை போராட்டக்காரர் கள் அமைதி காக்க வேண்டும்.

அதேநேரத்தில் போராட்டம் காரணமாக மாநிலத்தில் உள்ள தொழில் வளம் பாதிக்கப்படவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற போராட்டங் கள் மாநிலத்திற்கு தொழில் முதலீடு வருவதை தடை செய்கின்றன. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அமைதிக்கு நாம் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

அதே சமயத்தில் மற்ற சமுதாயத்தினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.

மராத்தா சமுதாயத்தினர் நடத்திய அமைதியான போராட்டங்கள் அவர்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது. தற்போது நிகழும் வன்முறைகளால் அந்த அந்த நன்மதிப்பு பறிபோவது நல்ல முன்னேற்றமாக தெரியவில்லை.

வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் மராத்தா இளைஞர்களை கொதிப்படைய செய்துள்ளது. இருப்பினும் கலவரத்தில் ஈடுபடுவதோ, கற்களை வீசுவதோ அல்லது தற்கொலை செய்துகொள்வதோ நல்ல தீர்வாகாது.

இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார். 

Next Story