மாவட்ட செய்திகள்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம் + "||" + Audipara festival festival in Thiruvarur Thiagarajar temple

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்
திருவாரூர் தியாக ராஜர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கேடய உற்சவம், பூத வாகனம், வெள்ளி வாகனம், யானை, ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடந்தது.


இதன் தொடர்ச்சியாக நேற்று அம்மன் தேரோட்ட விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். மாலை 6.45 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் ஆரூரா, கமலாம்பாள் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்த தேர் கீழவீதியில் இருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து தேரில் இருந்து அம்மன் புறப்பட்டு கோவிலை அடைந்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா
பரக்கலக்கோட்டையில் உள்ள பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
2. சிவன் கோவில்களில் சோமவார விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சிவன் கோவில்களில் சோமவார விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. கோவில் விழாவில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 38 பேருக்கு வாந்தி-மயக்கம்
முசிறி அருகே கோவில் விழாவில் பிரசாதம் சாப்பிட்ட 17 குழந்தைகள் உள்பட 38 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
4. பெரம்பலூரில் தலையாட்டி சித்தருக்கு கொட்டும் மழையில் குருபூஜை திரளானவர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூரில் தலையாட்டி சித்தருக்கு கொட்டும் மழையில் நடைபெற்ற குருபூஜையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
5. கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கந்தசஷ்டி விழாவை யொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.