சூளகிரியில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ் 40 பயணிகள் உயிர் தப்பினார்கள்


சூளகிரியில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ் 40 பயணிகள் உயிர் தப்பினார்கள்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் இறங்கியது.

இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story