மாவட்ட செய்திகள்

பர்கூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு + "||" + Traffic hit by trucks near Bargar

பர்கூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

பர்கூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
கருங்கல்குட்டை என்ற இடத்தில் நேற்று காலை கல் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. திடீரென்று அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
பர்கூர்,

பர்கூர் அருகே உள்ளது மஜீத்கொல்லஅள்ளி. இதன் அருகில் போச்சம்பள்ளி செல்லும் சாலையில் கருங்கல்குட்டை என்ற இடத்தில் நேற்று காலை கல் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. திடீரென்று அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. நல்ல வேளையாக அந்த நேரம் பொதுமக்கள் யாரும் அந்த பகுதியில் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கிரேன் மூலமாக விபத்துக்குள்ளான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.