கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த பலசரக்கு கடை வியாபாரி மீது தாக்குதல் ஒருவர் கைது


கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த பலசரக்கு கடை வியாபாரி மீது தாக்குதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2018 3:45 AM IST (Updated: 13 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த பலசரக்கு கடை வியாபாரி மீது தாக்குதல் ஒருவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே ஸ்ரீலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 40). வியாபாரியான இவர் உசரவிளையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு உசரவிளை ஆலி, லட்சுமிபுரத்தை சேர்ந்த ரூபன், மகேஷ் ஆகிய 3 பேர் வந்து கடனுக்கு சிகரெட் கேட்டனர். ஆனால் விஜயன் கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விஜயனை தாக்கி கடையை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபனை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.


Next Story