தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: கோபியில் மவுன ஊர்வலம்


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: கோபியில் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:56 AM IST (Updated: 13 Aug 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கோபியில் மவுன ஊர்வலம் நடந்தது.

கடத்தூர்,

கோபியில் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மவுன ஊர்வலம் கோபி கரட்டூரில் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவபடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கோபி பஸ் நிலையத்தை அடைந்தது.

இதில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன், மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் நல்லசாமி, கோபி தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் நாகராஜன், டாக்டர் செந்தில்நாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி சிவராஜ், ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story