கருணாநிதிக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி


கருணாநிதிக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 13 Aug 2018 3:15 AM IST (Updated: 13 Aug 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவிலில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

காட்டுமன்னார்கோவில், 



மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறிஞ்சிப்பாடியில் தி.மு.க. உள்பட அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கடைவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழக முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

ஊர்வலம் பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலையை சென்றடைந்த பின்னர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் தி.மு.க. குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் செங்கல்வராயன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. ராமலிங்கம், நகர செயலாளர் சட்டநாதன், திராவிட அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜி, விடுதலை சிறுதைகள் கட்சி நகர செயலாளர் பாலமுருகன், முஸ்லிம் லீக் கட்சி அன்வர் உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காட்டுமன்னார் கோவிலில் நடந்த அமைதி ஊர்வலத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சண்முகம், நகர செயலாளர் கணேசமூர்த்தி, இலக்கிய அணி குமாரராஜா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இளங்கோவன், பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்டு எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி முடிவண்ணன், பிரகாஷ், விவசாய சங்க தலைவர்கள் விநாயக மூர்த்தி, இளங்கீரன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். காட்டுமன்னார்கோவில் பெரிய குளத்தில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம், தாலுகா அலுவலகம் அருகே வந்து முடிவடைந்தது. பின்னர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story