பயோமெட்ரிக் அடையாளம் காணும் முறையால் குற்ற வழக்குகளில், தண்டனை பெறுவோர் சதவீதம் உயரும்


பயோமெட்ரிக் அடையாளம் காணும் முறையால் குற்ற வழக்குகளில், தண்டனை பெறுவோர் சதவீதம் உயரும்
x
தினத்தந்தி 13 Aug 2018 5:46 AM IST (Updated: 13 Aug 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

பயோமெட்ரிக் அடையாளம் காணும் முறையால் குற்ற வழக்குகளில், தண்டனை பெறுவோர் சதவீதம் உயரும் என்று முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் பயோ மெட்ரிக் முறையில் ஒரு நபரை அடையாளம் காணும் முறையை நடைமுறைப்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

போலீசார் தங்களிடம் உள்ள டிஜிட்டல் தகவல்கள் மூலம் 0.46 வினாடிகளில் ஒருவரின் கைரேகை, கருவிழி கொண்டு அவரை அடையாளம் காண முடியும். மேலும் அந்த நபர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா போன்ற விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்தநிலையில், முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பயோமெட்ரிக் மூலம் அடையாளம் காணும் முறை குறித்து கூறியதாவது:-

பயோ மெட்ரிக் முறை மூலம் குற்ற சம்பவங்களில் 100 சதவீதம் சரியான குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் குற்றவழக்குகளில் தண்டனை பெறுபவர்களின் சதவீதம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story