நாளை மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள், பார்கள் மூடப்படும்
சுதந்திர தினத்தையொட்டி, நாளை மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள், பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் முழுநேரமும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள்(பார்கள்) மூடப்பட வேண்டும்.
மேலும், மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story