மாநில அளவிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்திய பெரம்பலூர் அணி
மாநில அளவிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பெரம்பலூர் அணி கோப்பையை தட்டி சென்றது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து தனலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. போட்டியை தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். லீக் முறையில் தொடர்ந்து நடந்த கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு விளையாட பெரம்பலூர் அணியும், சென்னை அணியும் தகுதி பெற்றன. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த பெரம்பலூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் சாம்கென்னடி 54 ரன்களை எடுத்தார். 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெரம்பலூர் அணி வெற்றி பெற்றது. பெரம்பலூர் அணியின் வீரர் அமர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளையின் உறுப்பினர் ராஜசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் அணிக்கு தனலட்சுமி அம்மாள் நினைவு கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். விழாவில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் பொது செயலாளர் சதாநத், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் பொது செயலாளர் பழனிசாமி, பொருளாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story