குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து போலீஸ் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள்
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில், போக்குவரத்து போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில், விபத்துகளை குறைக்க சாலையை கண்காணிக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை எம்.ஐ.டி. மேம்பாலம் அருகில் உள்ள குரோம்பேட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சுவாமிநாதன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார். இதில் பரங்கிமலை உட்கோட்ட போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் அன்வர் பாஷா, சப்–இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, ‘‘சாலைகளை கண்காணிக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சார்பில் சென்னையில் முதல் முறையாக குரோம்பேட்டையில்தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகளில் நடக்கும் விபத்துகள் குறித்து எளிதில் கண்காணிக்கவும், விபத்து ஏற்படும் காரணங்களை தெரிந்துகொண்டு மீண்டும் அதுபோல் நடக்காமல் தடுத்து விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்’’ என்றனர்.
Related Tags :
Next Story