காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் சித்தராமையா பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் சார்பில் ‘மக்களின் குரல்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் பீதரில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது பா.ஜனதாவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. அனைத்து துறையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தவறான பிரசாரம் மூலம் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.
பிரதமர் மோடி இந்த நாட்டின் காவல்காரர் கிடையாது, அவர் நாட்டில் நடந்த ஊழல்களின் பங்கேற்பாளர். அவருடைய விருப்பத்தின் பேரிலேயே நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது. பொய்யான வாக்குறுதிகள் மூலம் நாட்டு மக்களை மோடி முட்டாளாக்கிவிட்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். அவர் விவசாய கடனை தள்ளுபடி செய்வார்.வெறும் பேச்சால் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். சமூகநீதியை நிலைநாட்டும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள், காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story