சுதந்திர தினத்தன்று 497 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தகவல்


சுதந்திர தினத்தன்று 497 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:15 AM IST (Updated: 14 Aug 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தன்று 497 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் நாளை (புதன்கிழமை) சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம், முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் , பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம் ஊரகம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், பொது வினியோகத் திட்டம் மற்றும் கிராமத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்தல் உள்ளிட்ட பொருள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து கூட்டத்தில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் அனைத்து விலையில்லா பொருட்களையும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் வழங்குதல் மற்றும் கற்றல் கற்பித்தலில், கிராம அளவில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விவரத்தினை தெரிவித்திட இலவச தொலைபேசி எண் 1098 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story