வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்த பின்னர் கடை மடை பகுதி வரை தண்ணீர் சீராக செல்லும் அமைச்சர் பேட்டி
புகளூர் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி முடிந்த பின்னர் கடைமடை பகுதி வரை தண்ணீர் சீராக செல்லும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதிக்கு நேற்று மாலை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்து, கதவணை பகுதியில் ஆற்றில் செல்லும் நீரை பார்வையிட்டார். பின்னர் கதவணை பகுதிக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு, பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு, கதவணைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், காவிரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம்பகுதிக்கு கடவூர் ஒன்றியம் வழியாக குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கப்பட்டு கடவூர் வரை பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமாக தண்ணீர் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த பணி திண்டுக்கல் மாவட்ட பகுதியில் நிறைவடையாத நிலையில் உள்ளது. எனவே தற்போது காவிரி ஆற்றில் ஓடும் அதிகப்படியான தண்ணீரை அந்த குழாயின் மூலம் கடவூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கும், பஞ்சப்பட்டி ஏரிக்கும் கொண்டு சென்று நிரப்பினால் அந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்க வழி பிறக்கும், என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது, மாவட்ட கலெக்டர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ., குளித்தலை கோட்டாட்சியர் லியாகத், கிருஷ்ணராயபுரம் பொறுப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், குளித்தலை உபகோட்ட ஆற்றுப் பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் கார்த்திக் உள்பட பலர் இருந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தற்போது மாயனூர் கதவணை பகுதியல் 98 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்தும் கரையோரப் பகுதிகளில் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பினாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. கரூர் மாவட்டத்திற்கு பாசன வசதி தரும் புகளூர் வாய்க்கால் பிரியும் இடத்தில் ஆற்றின் அகலம் குறைவாக இருந்ததால், வாய்க்காலின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை மணல் மூட்டைகளை அடுக்கி அப்பகுதி விவசாயிகளும், பொதுப்பணித் துறையினரும் சீரமைத்து வருகின்றனர். இப்பணி முடிந்த பின்னர் புகளூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கல் ஆகியவற்றில் கடைமடை பகுதி வரை சீராக தண்ணீர் செல்லும், என்று கூறினார்.

Related Tags :
Next Story