ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பெண்கள் சாமி தரிசனம்
தர்மபுரியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
ஆடிப்பூரத்தை முன்னிட்டு தர்மபுரி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்கார சேவையும் நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி பிடமனேரி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் வளையல் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதேபோல் நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகா மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் தெரு விருந்தாடியம்மன் கோவில், குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்கள பொருட்கள்சிறப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு 5 ஆயிரம் வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story