கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு முதல் 3 இடங்களையும் மராட்டியம் பிடித்தது
கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், முதல் 3 இடங்களையும் மராட்டியம் பிடித்தது.
மும்பை,
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கவலையும், நெருக்கடியும் இன்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது. சிறந்த நிர்வாகம், சமூக நிறுவனங்கள், பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா தவிர நாட்டின் 111 நகரங்கள் கலந்து கொண்டன.
இந்த நகரங்களின் வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதில் மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரமாக மராட்டிய மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்தது. நவிமும்பைக்கு 2-வது இடம் கிடைத்தது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை 3-வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் முதல் 3 இடங்களையும் மராட்டியம் தட்டிச்சென்றது.
இதைத்தொடர்ந்து திருப்பதி, சண்டிகார், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகியவை முறையே 4 முதல் 10-வது இடங்களை பிடித்தன.
சென்னை நகருக்கு இதில் 14-வது இடம் கிடைத்தது. நாட்டின் தேசிய தலைநகரான டெல்லி இந்த பட்டியலில் 65-வது இடத்தையே பிடித்தது.

Related Tags :
Next Story