5 அஞ்சலகங்களில் வங்கி சேவை திட்டம் 21-ந் தேதி தொடக்கம் - புதிய கண்காணிப்பாளர் தகவல்
சேலம் கிழக்கு கோட்டத்தில் 5 அஞ்சலகங்களில் “போஸ்ட் பேமென்ட்“ என்ற வங்கி சேவை திட்டம் வருகிற 21-ந் தேதி தொடங்கப்படும் என புதிய கண்காணிப்பாளர் முஜிப் பாஷா தெரிவித்தார்.
சேலம்,
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளராக முஜிப் பாஷா பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அரசு அனைவருக்கும் எல்லா வங்கி சேவைகளையும் அளிக்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில், அஞ்சல் துறையின் மூலமாக இந்தியா “போஸ்ட் பேமென்ட்“ என்ற வங்கி சேவையை தொடங்க உள்ளது. இதன்மூலம் நகரம் மற்றும் கிராமப்புற தபால்காரர்கள் மூலம் வீட்டுக்கு தேடி வந்து வங்கி சேவை வழங்கப்படும்.
இந்த சேவையை நாடு முழுவதும் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர் தன் வீட்டில் இருந்தே பணம் செலுத்தவோ, பெறவோ என அனைத்து வகையான பண பரிமாற்றம் குறைந்த சேவை கட்டணத்தின் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் ஐ.பி.பி.பி. சேமிப்பு கணக்கில் ரூ.5 ஆயிரம் வரையிலும், நடப்பு கணக்கில் ரூ.20 ஆயிரம் வரையிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
கைப்பேசி மூலம் வங்கி சேவை, வலைத்தள வங்கி சேவை, குறுந்தகவல் வங்கி சேவை உள்ளிட்டவை வழங்கப்படும். கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு போதுமானது. சேமிப்பு கணக்கு தொடங்க முன்வைப்பு தொகை எதுவும் கிடையாது. இந்த கணக்கு ஆதார் எண்ணோடு தொடங்குவதால் மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை தபால்காரர் மூலம் பெறலாம். இந்த கணக்குதாரர்களுக்கு “குயிக் ரெஸ்பான்ஸ்“ அட்டை வழங்கப்படும். அனைத்து சேவைகளுக்கும் கைரேகை பதிவு கட்டாயம். எனவே சேமிப்பு பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கும்.
முதற்கட்டமாக ‘போஸ்ட் பேமென்ட்“ வங்கி சேவை சேலம் கிழக்கு கோட்டத்தின் கீழ் உள்ள சேலம் தலைமை அஞ்சல் நிலையம், கொண்டலாம்பட்டி துணை அஞ்சலகம், பூலாவரி அக்ரஹாரம், புத்தூர், நெய்க்காரப்பட்டி கிளை அஞ்சலகங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தை வருகிற 21-ந் தேதி பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி சேலம் ஜெயராம் கலை அறிவியல் கல்லூரியில் மதியம் 2.15 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story