கப்பல் பணிமனையில் 318 பயிற்சிப் பணிகள்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பணிமனை ஒன்று மும்பையில் செயல்படுகிறது.
மும்பை நேவல் டாக்யார்டு எனப்படும் இந்த பணிமனையில் தற்போது ‘அப்ரண்டிஸ் டிரெயினி’ பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 318 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், பிளம்பர், மாசன், மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், பெயிண்டர், பவர் எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், பவுண்டரி மேன், பைப் பிட்டர், ஷிப்ரைட், கிரேன் ஆபரேட்டர், ரிகர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இது சார்ந்த பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சமீபத்தில் ஐ.டி.ஐ. முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பிரெஷர் குறிப்பிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 1-4-1999 மற்றும் 31-3-2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் படைப்பிரிவு பணியாளர் களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனும், பார்வைத்திறன் 6/6 முதல் 6/9 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். www.bhartiseva.com என்ற இணையதளம் வழியே 17-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான இடத்தில் குறிப்பிட்ட சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story