வேலைவாய்ப்பு செய்திகள் : ரெயில்டெல் நிறுவனம்
மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்று ரெயில்டெல் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்.
ரெயில்வே தொடர்பான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை இது கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் (டெக்னிக்கல்), சீனியர் மேனேஜர்/ஆபரேசன் சப்போர்ட் சிஸ்டம் சீனியர் மேனேஜர் (சர்வீஸ் அஸ்யூரன்ஸ்), அசிஸ்டன்ட் மேனேஜர் (டெக்னிக்கல்) போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 37 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
பி.இ., பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணியிடங்கள் தொடர்பான என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-8-2018-ந் தேதி வி்ண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.railtelindia.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Related Tags :
Next Story