நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா: கலெக்டர் பிரசாந்த் வடநேரே இன்று கொடியேற்றுகிறார்
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நாகர்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடி ஏற்றுகிறார்.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
காலை 9.20 மணிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்று கொள்கிறார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நாகர்கோவில் கோட்டார், ராமன்புதூர், கருங்கல், தென்தாமரைகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பள்ளிகளின் 767 மாணவ–மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. காவல்துறை சார்பில் 2 சப்–இன்ஸ்பெக்டர்களுக்கு சிறந்த சேவைக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழாவையொட்டி விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் 1,500–க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீனவ கிராமங்களில் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில், கன்னியாகுமரி ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சூட்கேஸ், பேக்குகள் போன்றவை ஸ்கேனர் எந்திரங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன.
ரெயில் தண்டவாளங்களில் வெடிபொருள் சோதனையும் நடத்தப்பட்டது. போலீஸ் மோப்ப நாய் மூலமும், வெடிபொருள் கண்டறியும் கருவிகள் மூலம் போலீசார் இந்த சோதனை மேற்கொண்டனர்.
சுதந்திர தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் போலீசார் நேற்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர். அதேபோல் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ–மாணவிகளும் நடன ஒத்திகையை மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story