திருச்சுழியில் இருந்து நெல்லைக்கு மணல் கடத்தல்


திருச்சுழியில் இருந்து நெல்லைக்கு மணல் கடத்தல்
x
தினத்தந்தி 15 Aug 2018 3:00 AM IST (Updated: 14 Aug 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி, 


கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் உத்தரவின்பேரில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, அரி கண்ணன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 5 லாரிகளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த லாரிகளில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து முறைகேடாக ஆற்றுமணலை அள்ளி, நெல்லைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. எனவே அந்த 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக அந்த லாரிகளின் டிரைவர்களான நெல்லை மாவட்டம் மருதூரை சேர்ந்த சங்கரபாண்டியன் மகன் முருகேசன் (வயது 28), திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த கொம்பன் மகன் அடைக்கலம் (27), கோவில்பட்டி அருகே அய்யனேரியை சேர்ந்த முருகன் (44), மதுரை மாவட்டம் கோபிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவிராஜ் மகன் ராஜ்குமார் (30), கோவில்பட்டி அருகே அப்பனேரியை சேர்ந்த சுப்பையா மகன் வேல்சாமி (38) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story