11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை
11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதையொட்டி பேட்டரி கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னம்,
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதி மாலா நகரை சேர்ந்தவர் சேட்டு. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகள் கமருன்னிஷா (வயது 27). இவர் குன்னம் அருகே உள்ள இலந்தகுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்தார். பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்து மகன் ஆனந்த் (33). இவர் 11 வருடங்களுக்கு முன்பு கார் பேட்டரி கடையில் வேலை பார்த்தார்.
அப்போது கமருன்னிஷா ஆசிரியை பயிற்சி பள்ளியில் படித்தார். அந்த நேரத்தில் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கமருன்னிஷாவுக்கு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. ஆனந்த் பெரம்பலூரில் சொந்தமாக கார் பேட்டரி விற்பனை செய்யும் கடை தொடங்கினார். அப்போதும் அவர்கள் காதல் தொடர்ந்தது.
இந்த நிலையில் அவர்கள் காதலில் திடீர் பிளவு ஏற்பட்டது. ஆனந்தின் நடவடிக்கை சரி இல்லை என்று கமருன்னிஷாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் ஆனந்தை சந்திப்பதை தவிர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமருன்னிஷாவை ஆனந்த் நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் திருமணத்திற்கு கமருன்னிஷா மறுத்து விட்டார். அதோடு ஆனந்தை சந்திப்பதையும் நிறுத்தி விட்டார். அவரை சந்தித்து பேச ஆனந்த் பல முறை முயன்றார். ஆனால் கமருன்னிஷா சந்திக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் கமருன்னிஷாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறித்த ஆனந்த் மேலும் ஆத்திரம் அடைந்தார். தன்னை திருமணம் செய்ய மறுத்த கமருன்னிஷாவை தீர்த்துக்கட்ட அவர் திட்டமிட்டார்.
கமருன்னிஷா தினமும் பெரம்பலூரில் இருந்து பஸ்சில், அல்லி நகரம் கிராமத்திற்கு செல்வார். பின்னர் அங்கு இறங்கி, அங்கு நிறுத்தி வைத்திருக்கும் ஸ்கூட்டரில் இலந்தகுழி பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு காலை 9.15 மணி அளவில் ஸ்கூட்டரில் கமருன்னிஷா சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்த், அவரது நண்பர் பெரம்பலூர் தேரடி பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) ஆகிய இருவரும் கமருன்னிஷாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர்.
இலந்தகுழி-தொண்டபாடி இடையில் பொட்டேரி என்ற இடத்தில் கமருன்னிஷா ஸ்கூட்டரை ஆனந்த் வழிமறித்து நிறுத்தினார். கமருன்னிஷாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆனந்த் மீண்டும் வலியுறுத்தினார். அதற்கு அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறியதோடு அங்கிருந்து புறப்பட முயன்றார். இதனால் கோபமடைந்த ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமருன்னிஷா முகத்தில் குத்தி விட்டு என்னை திருமணம் செய்யாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அப்போதும் கமருன்னிஷா, உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் கமருன்னிஷா கழுத்தில் கத்தியால் குத்தியதோடு, கழுத்தை கத்தியால் அறுத்தார். கமருன்னிஷா அலறியபடி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். ஆனந்தும், அவரது நண்பர் அரவிந்தும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கமருன்னிஷாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கமருன்னிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ஆனந்த், அரவிந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு குமரகுரு, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story