டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல்
தேனி அருகே டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45). இவர், பழனிசெட்டிபட்டியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இந்த பாருக்கு உத்தமபாளையம் சூரியநாராயணபுரத்தை சேர்ந்த மோகன் (28), உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அர்ஜூன் (28), தேனி ஆற்றங்கரைத்தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (27) ஆகியோர் வந்தனர்.
அப்போது அவர்கள், ரத்தினவேலிடம் மதுபானம் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி வருமாறு கூறினர்.
அதற்கு அவர், பணம் கேட்டதால் 3 பேரும் கொடுக்க மறுத்து தகராறு செய்தனர்.
மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ரத்தினவேலை தாக்கினர். அங்கிருந்த நாற்காலியால் தாக்கியதில் ரத்தினவேலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து மோகன், அர்ஜூன், மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story