அரசு போக்குவரத்து கழகத்தில் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும், பேரவை கூட்டத்தில் தீர்மானம்
அரசு போக்குவரத்து கழகத்தில் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்று பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையின் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரவையின் பெயர் பலகையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கர்நாடக மாநில போக்குவரத்து துறையில் ஒழுங்குமுறை ஆணையம் இருப்பதை போன்று தமிழக அரசு போக்குவரத்து கழகத்திலும் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அரசு போக்குவரத்து நிர்வாகம் பஸ்சை இயக்குவதிலும் சரி, அவர்கள் செயல்பாடுகளிலும் சரி தனியார் பஸ் நிறுவனங்களை விட மோசமாக உள்ளது. எனவே போக்குவரத்து ஊழியர்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், அவர்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடவும் இந்த புதிய பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story