எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை
எந்த கட்சியையும் உடைக் கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருவண்ணாமலை,
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலை கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் குறித்து முதலில் ராகுல்காந்தி தான் விளக்கம் தர வேண்டும். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக மோடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. செய்யாததை விட தமிழகத்துக்கு அதிக திட்டங்களை மோடி வகுத்துள்ளார். பாலாறு- தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் கூறியது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த இந்நேரத்தில் ஒரு கட்சியை பற்றி குறை கூறுவது நாகரிகம் இல்லை. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, தி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத்தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர்.
மு.க.ஸ்டாலின் மேயராக, அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக இருந்தவர். கனிமொழி எம்.பி.யாக திறம்பட செயல்படுகிறார். ஆகவே, தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பாரதீய ஜனதா கட்சிக்கு இல்லை.
எந்த தேர்தலிலும் பாரதீய ஜனதா கட்சி முதல் நிலை கட்சியாக இருக்கும். கூட்டணி வியூகங்கள் வகுத்து வருகிறோம். அது என்ன என்று பிறருக்கு தெரியாததால் அந்த கட்சியை ஆட்டி படைக்கிறார்கள், இந்த கட்சியை ஆட்டி படைக்கிறார்கள் என்று குறை கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story