நீலாங்கரை பகுதியில் பெண்களை கடத்தி கற்பழித்த கார் டிரைவர் கைது
நீலாங்கரை பகுதியில் தனியாக சென்ற பெண்களை கடத்திச் சென்று கத்திமுனையில் கற்பழித்ததாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கால்டாக்சியில் வரும் சிலர் கடத்திச்சென்று கத்திமுனையில் கற்பழித்து விடுவதாகவும், பெண்களிடம் செல்போன்கள், நகைகளை அவர்கள் பறித்து விடுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணித்தனர். அப்போது ஒரு கார் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மறைவான இடத்துக்கு சென்றதை கண்ட போலீசார் விரைந்து சென்றனர்.
டிரைவர் கைது
பின்னர் அந்த காரை வழிமறித்தனர். அதில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் ஓடினார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், பிடிபட்டவர் கண்ணகி நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், அவர் கால்டாக்சி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை வீட்டில் விடுவதாக நைசாக பேசி காரில் ஏற்றிக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் மறைவாக உள்ள பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து நகைகளை பறித்ததை அவர் ஒப்புக் கொண்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் கற்பழித்து இருப்பதாகவும் இதில் 2 பேர் தான் புகார் செய்து இருப்பதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story