தஞ்சை அருகே அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு கண்காட்சி கலெக்டர் பார்வையிட்டார்
தஞ்சை அருகே அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடந்த கரும்பு கண்காட்சியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மூலமாக கரும்பு விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளவும், கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், கரும்பு அறுவடை திறனை அதிகரிக்கவும் கரும்பு கண்காட்சி நடத்தப்படுகிறது.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்ப ஏறக்குறைய 4 ஆயிரம் எக்டேரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்த கரும்புகளை பயிரிடும் விவசாயிகள், எந்திரங்களை பயன் படுத்தி எவ்வாறு அறுவடை செய்வது, அறுவடை செய்த கரும்பை எப்படி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைப்பது தொடர்பான தொழில் நுட்பங்களை இந்த கண்காட்சி மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு நல்ல மகசூலை பெற வேண்டும்.
முக்கொம்பில் இருந்து 53 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படுகிறது. கல்லணைக் கால்வாயில் 3,004 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கல்லணைக்கால்வாய் கரைகளை பலப்படுத்தும் பணியில் 10 டிராக்டர்கள், பொக்லின் எந்திரங்களுடன் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து ஏரி, குளங் களில் தண்ணீர் நிரப்பவும், கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஜனனி சவுந்தர்யா, கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜஸ்டின், துணை இயக்குனர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story