ஏரிமலையில் இருளர் சமூக மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம் மனு


ஏரிமலையில் இருளர் சமூக மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:00 AM IST (Updated: 15 Aug 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரிமலையை சேர்ந்த இருளர் சமூகத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கலெக்டர் மலர்விழியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரிமலையை சேர்ந்த இருளர் சமூகத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கலெக்டர் மலர்விழியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஏரிமலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் குடியிருப்பு உள்ளது. மலையில் கிடைக்கும் சுண்டகாய், தேன், விறகு ஆகிய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் மிக குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறோம். நாங்கள் அனைவரும் குடிசைகளில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறோம். மழைகாலங்கள் மற்றும் சூறைக்காற்று வீசும் நேரங்களில் குடிசைகள் சேதமடைந்து விடுகிறது. இதனால் எங்களுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உள்ளனர். 

Next Story