ஏரியூர் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதல்; 6 மாணவ-மாணவிகள் படுகாயம்
ஏரியூர் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரில் நேற்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று நின்று மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது. அப்போது பின்னால் வந்த ரிக் லாரி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பிரகதீஸ் (வயது 10), காவியா (10), அஸ்வின் (7) உள்ளிட்ட 6 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் தாசில்தார் அழகுசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு மாதத்தில் சாலையை விரிவாக்கம் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் லாரியை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story