வாலாஜாபாத் ஒன்றியத்தில் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்


வாலாஜாபாத் ஒன்றியத்தில் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2018 3:09 AM IST (Updated: 15 Aug 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் ஒன்றியத்தில் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட நீர்வள்ளுர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதுவரை இந்த பள்ளி கட்டிடத்தில் எந்த சீரமைப்பு பணியையும் அரசு செய்யவில்லை. குடிநீர், கழிவறை வசதி என குறைந்தபட்ச அடிப்படை வசதி கூட செய்யவில்லை.

மழைக்காலத்தில் கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து விழுகிறது. மாணவ- மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். அதனால் பழுதடைந்த இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து மனுக்களை அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

பூட்டு போட்டு போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்டி கொடுக்காத அரசு அதிகாரிகளை கண்டிப்பதாகவும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story