திருச்சியில், புதிய தமிழகம் கட்சி இளைஞர் அணி மாநில மாநாடு டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
அக்டோபர் மாதம் 6-ந் தேதி திருச்சியில் புதிய தமிழகம் கட்சி இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருச்சி,
புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வருகிற அக்டோபர் மாதம் 6-ந் தேதி திருச்சியில் மாநில இளைஞர் அணி மாநாட்டை நடத்த இருக்கிறோம். மாநாட்டில் 1 லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம்.
ஏற்கனவே, சென்னை உள்ளிட்ட ஊர்களில் நடந்த மாநாடுகளில் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். திருச்சியில் நடக்க உள்ள இளைஞர் அணி மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் அறிவிப்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றாவிட்டால் அது போராட்ட அறிவிப்பு மாநாடாக அமையும்.
ஆதிதிராவிடர்கள் என்று 76 சாதிகளுக்கு பெயரிட்டதை தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறார்கள். இந்த கோரிக்கைக்கு வடிவம் கொடுத்தது புதிய தமிழகம் கட்சிதான். சமத்துவமும் சமபங்கு என்று அழைக்கப்படக்கூடிய உலக சமதர்ம விதிகளின்படி, ஒரு சமுதாயம் தனக்குண்டான மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்கு உரிமை உள்ளது.
தமிழகத்தில் தனிநபர் ஆதிக்கம் முடிவுக்கு வந்து விட்டது. கொள்கை, கோட்பாடு இவற்றை தவிர்த்து யார் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறார்களோ அவர்களே ஆட்சிக்கு வரமுடியும். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக புதிய தமிழகம் விளங்கும். இதுவரை போலி திராவிடம் பேசி தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story