சிவமொக்கா, பத்ராவதியில் தொடர் கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சிவமொக்கா, பத்ராவதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பத்ராவதி டவுனில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.
பத்ராவதி,
கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து பெங்களூரு நகர் உள்பட அனைத்து மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையால் மாநிலத்தில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பின.
இந்த நிலையில் கனமழையின் தாக்கம் சிறிது குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மலைநாடுகள் என்று போற்றப்படும் சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக சிவமொக்கா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தீர்த்தஹள்ளி பகுதியில் ஓடும் துங்கா ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள புகழ்பெற்ற ராமமண்டபம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் டவுனில் உள்ள கனகதாச சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து உள்ளது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனமழையை தொடர்ந்து நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் தயானந்த் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
இதேப்போல சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதியில் பெய்த கனமழையால் பத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள குண்டுராவ் செட் காலனியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பத்ராவதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். மேலும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அரசிடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தார். இந்த கனமழையால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிப்பு அடைந்து உள்ளது.

Related Tags :
Next Story