வானவில் : ரொட்டி மாட்டிக்
மாவு பிசைந்து, கை வலிக்க வலிக்க சப்பாத்தி தேய்க்கும் பெண்களுக்கு உதவ வந்திருக்கும் புதிய எந்திரம் ‘ரொட்டிமாட்டிக்’.
மாவு பிசைவதில் இருந்து மாவை உருட்டி, தேய்த்து சப்பாத்திகளாக சுட்டுத் தருவது வரை எல்லா வேலைகளையும் செய்து விடும் இந்த ஸ்மார்ட் மெஷின். இதில் ரொட்டிகள் மட்டுமின்றி பூரி, பீட்ஸா போன்றவைகளும் தயாரிக்க முடியும்.
இதில் மாவு, உப்பு, எண்ணெய் ஆகியவைகளை சேர்ப்பதற்கென்று தனி தனி அறைகள் உள்ளன. தேவையான பொருள்களை நிரப்ப வேண்டியது மட்டுமே நமது வேலை. சப்பாத்தியா? பூரியா? நமக்கு என்ன தேவை என தேர்ந்தெடுத்து அதற்குரிய பட்டனை அழுத்தினால் போதும்.
உதாரணமாக சப்பாத்தியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் அழகான, ஒரே சீரான வட்ட வடிவம் கொண்ட சப்பாத்திகளை 90 வினாடிகளில் தயார் செய்துவிடும். எந்த வகையான மாவு, எவ்வளவு கனம் வேண்டும், எந்த அளவு சுட வேண்டும், எவ்வளவு எண்ணெய் சேர்க்க வேண்டும் ஆகிய விவரங்களை நமது விருப்பத்திற்கேற்ப இந்த எந்திரத்தில் பதிவு செய்ய முடியும்.
ஒரே நேரத்தில் 12 முதல் 14 ரொட்டிகள் வரை இதனை கொண்டு தயாரிக்கலாம். இதன் உயரத்தை ஒரு நடுத்தர அளவு மைக்ரோவேவ் ஓவனுடன் ஒப்பிடலாம். எனவே சிறிய மாடுலர் கிச்சனில் கூட இடத்தை அடைக்காமல் கச்சிதமாக வைக்கலாம்.
பெண்களின் வேலையை சுலபமாக்கவும், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தவும் களமிறங்கி இருக்கிறது இந்த கலக்கல் மெஷின்.

Related Tags :
Next Story