வானவில் : எண்ணெய் இன்றி பொரிக்க உதவும் ‘ஏர் பிரை’


வானவில் : எண்ணெய் இன்றி பொரிக்க உதவும் ‘ஏர் பிரை’
x
தினத்தந்தி 15 Aug 2018 10:45 AM IST (Updated: 15 Aug 2018 10:45 AM IST)
t-max-icont-min-icon

எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கிறது.

சுவையான உணவைக் காட்டிலும் சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை மக்களிடம் அதிகரித்து வருகிறது.

எண்ணெய் இன்றி, அதே நேரத்தில் உணவின் சுவை மாறாமல் பொரிக்க உதவுவதுதான் ‘ஏர் பிரை’. சமையலறையில் நவீன வரவான ஏர் பிரையரில் வெப்பக் காற்று பரவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் வைத்து பொரிக்க வேண்டியதில்லை. இதில் 360 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் பரவும். இதனால் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் சுவைபட சமைக்க முடியும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பொரிப்பதை விட ஏர் பிரை மூலம் பொரிப்பது சிறந்தது. ஏர் பிரையில் காய்கறி, அசைவ உணவுகளை சமைப்பதற்கு எண்ணெய் அவசியமில்லை. உணவின் மீது லேசாக எண்ணெய் தடவியிருந்தாலே அது மொறுமொறுப்பான சுவையை அளிக்கும், தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவில் சமையல் எண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கமாக எண்ணெயில் பொரிப்பதை விட 80 சதவீத அளவுக்கு குறைவான எண்ணெயே போதுமானது.

ஆரோக்கியமான சமையலுக்கு உதவும் இந்த புதிய வரவுக்கு பெண்கள் தரப்பில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. 

Next Story