நாகர்கோவிலில் கொட்டும் மழையில் நடந்த சுதந்திர தினவிழா; கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடியை ஏற்றி வைத்து ரூ.9½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் 72–வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நேற்று காலை நடந்தது.
விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக் கொடி ஏற்றி வைத்து, வணக்கம் செலுத்தினார். பின்னர் தேசிய கொடி நிறத்தினாலான மூவர்ண பலூன்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் பறக்கவிட்டனர்.
அதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே திறந்த ஜீப்பில் சென்று, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் உடன் சென்றார்.
மீண்டும் கொடிக்கம்பம் அமைந்துள்ள மேடைக்கு கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வந்து சேர்ந்ததும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசபக்தி பாடலை இசைத்தவாறு முன்செல்ல படைகளின் அணிவகுப்பு நடந்தது.
அதைத்தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்து 696 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் விளையாட்டுத்துறை சார்பில் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நடந்த தெற்காசிய தடகளப்போட்டியில் (இளநிலை) உயரம் தாண்டுதலில் முதல் இடம் மற்றும் 5–வது இடம் பிடித்த மாணவி கிரேசினா மெர்லி, மராட்டிய மாநிலத்தில், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த தடகளப் போட்டியில் முதல் இடம் பிடித்த மாணவி அபிநயா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தூய்மை பாரத இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பரிசு வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், சாம்சன் ஜெபதாஸ், இ–சேவை மைய ஊழியர் சிந்து, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை உதவியாளர்கள் பரமேஸ்வரன்பிள்ளை, ரவி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையைச் சேர்ந்த ராஜகுமார், ஜாண் செல்லையா உள்பட 50 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதும், அணிவகுப்பில் பங்கேற்ற முப்படைகளின் அணித்தலைவர்களும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது திடீரென மழை கொட்டியது. இருப்பினும் கொட்டும் மழையில் நனைந்தபடி கலெக்டர், படைத்தலைவர்கள் அறிமுகத்தை ஏற்றுக்கொண்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்தனர்.
வழக்கமாக சுதந்திர தினவிழாவின்போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அரசுத்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் கொடிக்கம்ப மேடையில் நின்றவாறே வழங்குவார். ஆனால் நேற்று சுதந்திர தினவிழா நடைபெற்று கொண்டிருக்கும்போதே மழை பெய்ததால் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விழா மேடையில் நடந்தது. மேலும் மழையின் காரணமாக விளையாட்டரங்க மைதானம் மழை தண்ணீருடன் காணப்பட்டதால் பள்ளி மாணவ– மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுதந்திர தின விழாவை காண வந்த மக்கள் கலை நிகழ்ச்சியை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலை 9.20 மணிக்கு ஏற்றப்பட்ட தேசியக்கொடி, விழா நிறைவடைந்த பிறகு சுமார் ½ மணி நேரம் மட்டுமே பறந்தது. கொட்டும் மழை காரணமாக தேசியக்கொடி அவிழ்க்கப்பட்டது.
விழாவில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள், போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின் ஜோன்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார், மாணவ– மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story