தூய்மை இந்தியா பணியை பார்வையிட வந்த மத்திய குழுவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பெரியபாளையம் அருகே தூய்மை இந்தியா பணியை பார்வையிட வந்த மத்திய குழுவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி மையம், பள்ளி, கோவில், மசூதி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிட மத்திய குழுவினர் வந்தனர்.
குழு தலைவர் சக்திவேல் தலைமையில் சுரேஷ்மேன்ஸ்ரீ, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசவுந்தரி, பிரதீப் ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று பார்வையிட்டனர்.
இந்த நிலையில், வண்ணாங்குப்பம் ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்ட பணியை பார்வையிட அவர்கள் சென்றனர்.
ஆய்வு பணி பாதியில் நிறுத்தம்
அப்போது பொதுமக்கள் மத்திய குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீங்கள் வருவதை தெரிந்து பிளீச்சிங் பவுடர் போட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துள்ளனர். மற்ற நேரத்தில் ஊராட்சி சார்பாகவும், ஒன்றிய அலுவலகம் சார்பாக எந்த பணியும் நடைபெறுவது இல்லை.
தற்போது இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆய்வு பணியை பாதியிலேயே முடித்து கொண்டு அதிகாரிகள் சென்றனர்.
Related Tags :
Next Story