கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
திண்டுக்கல் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரப்பரப்பு.
திண்டுக்கல், ஆக.16–
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சேசுராம். இவருடைய மகன் வசந்த் (வயது 28). அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாரதிபுரத்தில் உள்ள ஒரு மரக்கடையில் வசந்த் அமர்ந்திருந்தார். அப்போது அவர் திடீரென அந்த கடையில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர். பின்னர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வசந்த் ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி மாதம் இதேபோல, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story