டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Aug 2018 3:30 AM IST (Updated: 16 Aug 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 பேர் மீது மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 பேர் மீது மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story