ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திரதினவிழா: கலெக்டர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றினார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து 83 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராமநாதபுரம்,
சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை உள்பட 28 காவல்துறை அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் உள்பட பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த 64 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 83 பேருக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 83 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நகை வழிப்பறி கும்பலை துணிச்சலுடன் விரட்டி மடக்கி பிடித்த கிராம மக்கள் 3 பேருக்கு கலெக்டர் நடராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கொடிநாள் வசூலில் சாதனைபடைத்த ராமநாத புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமாருக்கு கவர்னரின் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட திட்ட இயக்குனர் ஹெட்சிலீமா அமாலினி, வருவாய் கோட்டாட்சியர் சுமன், பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட நீதிபதி கயல்விழி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம், சப்-கோர்ட்டு நீதிபதி பிரித்தா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்குமார், நீதித்துறை நடுவர் மன்ற எண்-1 நீதிபதி இசக்கியப்பன், எண்-2 நீதிபதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் அப்பாஸ்முகைதீன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கல்லூரி டீன் முகம்மது ஜகாபர் உறுதிமொழி வாசித்தார். கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் அலாவுதீன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் முதல்வர் ரஜபுதீன் உள்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முதல்வர் சுமையாதாவூது தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் மாரிமுத்து முன்னிலையில் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹாஜாமுகைதீன் முன்னிலையில் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் நாகலட்சுமி முன்னிலையில் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் அமானுல்லா ஹமீது முன்னிலையில் பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி கதிரேசன் கொடி ஏற்றி வைத்தார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் வேலுமனோகரன், ஜெகநாதன், முதல்வர் பரிமளா அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேசனல் பள்ளியில் செயலாளர் ஜீவலதா முன்னிலையில் தாளாளர் கணேசகண்ணன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் வீட்டுவசதிவாரிய பள்ளியில் முதல்வர் உஷா முன்னிலையில் தாளாளர் சண்முகராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளியில் செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா முன்னிலையில் தாளாளர் டாக்டர் மன்சூர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் நந்தகோபால் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முகம்மது சதக் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் சோமசுந்தரம் கொடி ஏற்றினார். ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் முதல்வர் சீனிவாசலு முன்னிலையில் தாளாளர் ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
ராமநாதபுரம் எம்.ஜி.பப்ளிக் பள்ளியில் செயலாளர் பிரேமா சுப்பிரமணியன், நிர்வாகி டாக்டர் ஹர்சவர்தன் ஆகியோர் முன்னிலையில் தாளாளர் டாக்டர் சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேசனல் அகாடமி பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் தாளாளர் டாக்டர் செய்யதா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர்கள் ராஜமுத்து, ஜெயலட்சுமி, துணை முதல்வர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ஜீவலதா முன்னிலையில் செயலாளர் ஜேசுதாஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பட்டணம்காத்தான் முகம்மது சதக் ஹமீது பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் நாதிராபர்வீன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
Related Tags :
Next Story